சூடுபிடிக்கும் தேர்தல் களம் – அதிமுக 170, கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகள்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – அதிமுக 170, கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகள்

தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேசிய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த தமிழகத் தேர்தலுக்கு பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வந்துள்ளார்.

சென்னை வந்துள்ள அவர், தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினருடன் அவர் பேச்சு நடத்தினார்.

170 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது மற்றும் பாஜக உட்பட கூட்டணிக்கு 64 தொகுதிகளை ஒதுக்கும் வகையில் பேச்சுகள் இடம்பெற்றதாக அதிமுகவினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு மற்றும் அமமுகவை இணைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அதிமுகவின் கருத்து வெளியிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )