‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நன்கொடை

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியது.

Prime Land குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராஹ்மனகே மற்றும் இணைத் தலைவர் சந்தமினி பெரேரா ஆகியோர் இந்த நிதி நன்கொடைக்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் நேற்று (22) கையளித்தனர்.

Prime Land குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய மற்றும் பணிப்பாளர் அநுர பத்திரகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )