ஐந்து மாவட்டங்களுக்கான தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கான தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 04.00 மணி முதல் நாளை புதன்கிழமை (24) மாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் லுணுகலை, மீகஹகிவுல, சொரனாதொட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் கண்டி மாவட்டத்தின் தொலுவ, மனிப்பே, உடுதும்பர , மெததும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிக்கும் மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல, அம்பன்கங்க கோரளை ,யட்டவத்த, ரத்தொட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டாஹின்ன, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )