அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது.

எனினும் இன்றைய வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதனையடுத்து நீதவான் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )