
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கையாளர்களை இராணுவ முகாம்களில் தங்கவைக்கும் திட்டம்
பிரித்தானியாவில் தங்கியுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்கவைக்கும் திட்டத்தை வரும் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஈஸ்ட் சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள குரோபரோ (Crowborough) இராணுவ முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்டோரைத் தங்கவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்கு உள்ளூர் மக்கள் மற்றும் கவுன்சில் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சட்ட ரீதியான சவால்களையும் அரசு எதிர்கொண்டுள்ளது.
