
நாடு முழுவதும் சோதனை – 2,300 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில்
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் சுமார் 2,300 பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.
நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பெய்த பலத்த மழையை கருத்திற் கொண்டு இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பொருட்களின் விலை, காலாவதி திகதி, உற்பத்தி திகதி, நிறம் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
