வெல்லவாயவில் வாகன விபத்து – ஒருவர் காயம்

வெல்லவாயவில் வாகன விபத்து – ஒருவர் காயம்

வெல்லவாயவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வெல்வாய-மொனராகலை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வெல்லவாய அஞ்சலிகம பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது இளைஞர் விபத்தில் படுகாயமடைந்து வெல்லவாய அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்து தொடர்பாக லொறியின் சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் விபத்து குறித்து வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )