
உலகின் மிகப்பெரிய அணு உலையை மீண்டும் தொடங்க ஜப்பான் தீர்மானம்
2011ஆம் ஆண்டு புகுஷிமா (Fukushima) அணு உலை விபத்திற்குப் பிறகு, அணுசக்தி பயன்பாட்டில் தயக்கம் காட்டி வந்த ஜப்பான், தற்போது மீண்டும் அணுசக்திக்குத் திரும்பும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ‘காஷிவாஸாகி-கரிவா’ (Kashiwazaki-Kariwa) நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கான இறுதி அனுமதியை நிகாட்டா (Niigata) மாகாண சபை இன்று வழங்கவுள்ளது.
புகுஷிமா விபத்தை ஏற்படுத்திய அதே ‘டெப்கோ’ (TEPCO) நிறுவனம் இந்த உலையை இயக்கவுள்ளதால், அப்பகுதி மக்களிடையே அச்சமும் அறுபது சதவீத எதிர்ப்பும் நிலவுகிறது.
இருப்பினும், வெளிநாட்டு எரிபொருட்களுக்கான செலவைக் குறைக்கவும், அதிகரித்து வரும் ஏ.ஐ (AI) தரவு மையங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும் அணுசக்தியே தீர்வென ஜப்பான் அரசு கருதுகிறது.
2040-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த மின் தேவையில் இருபது சதவீதத்தை அணுசக்தி மூலம் பூர்த்தி செய்ய ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
