
பொண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – நினைவு நாள் அனுஷ்டிப்பு
அவுஸ்திரேலியாவில், பொண்டி கடற்கரை தாக்குதல் (Bondi Beach attack) நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்நாட்டில் தேசிய நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
CATEGORIES உலகம்
