விமான நிலையத்தில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது

விமான நிலையத்தில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (21) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பயணப் பொதியில் 03 பெட்டிகளுக்குள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ‘பிளாட்டினம்’ ரகத்தைச் சேர்ந்த 42,000 சிகரெட்டுகள மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் அவிசாவளை, எபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )