
கம்போடியா உடனான எல்லை பிரச்சினை தீவிரம் – பாடசாலைகளை மூடிய தாய்லாந்து
கம்போடியா உடனான மோதல் காரணமாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தாய்லாந்து அரசாங்கம் மூடியுள்ளது.
இரு நாடுகளிடையே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட இரு நாடுகளிடையேயான மோதலில் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனைத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்
