
குற்றச்சாட்டுக்களை மறுத்த டேவிட் வொலியம்ஸ்
பிரித்தானியாவின் சிறந்த குழந்தைகள் எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் டேவிட் வொலியம்ஸ்(David Walliams), வெளியீட்டாளர் ஹார்பர்காலின்ஸ் UK (HarperCollins UK) அவரது புத்தகங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திய பின்னர், தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அவருக்கு எதிராக எதையும் உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் அவர் எந்த விசாரணையிலும் பங்கேற்கவில்லையென்றும் Walliams இன்
செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மற்றும் அவர் மீதான தகாத நடத்தை குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
ஹார்பர்காலின்ஸ் UK, புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் தலைமையில் Walliams இன் புத்தகங்களை வெளியிடாத தீர்மானத்தை எடுத்துள்ளது.
CATEGORIES உலகம்
