புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவும் கிரீஸும் புதிய ஒப்பந்தம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றில் பிரித்தானியாவும் கிரீஸும் கையெழுத்திட்டுள்ளன.
பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான யெவெட் கூப்பர் (Yvette Cooper) மற்றும் கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் (George Gerapetritis) ஆகியோர் கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸ் நகரில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக கடத்தல் கும்பல்களை இரு நாடுகளும் சட்ட ரீதியாக கையாள முடியும் எனக் கூறியுள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர், ஆங்கிலக் கால்வாயை கடக்க பயன்படுத்தப்படும் சிறுபடகுகள் விநியோகத்தை தடுக்க கிரீஸ் அதிகாரிகளுக்கு பிரித்தானியா உரிய பயிற்சியும் அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.
TAGS பிரித்தானியா
