
கஜேந்திரகுமார் தலைமையிலான குழு சீமானுடன் சந்திப்பு
தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை சந்தித்து கலந்துரையாடினர்.
தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்தி தமிழகத்தின் பிரதிநிதிகளை சந்திக்க தமிழ்த் தேசிய பேரவையினர் தமிழகம் சென்றுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேற்று சந்தித்திருந்த நிலையிலேயே இன்று இந்த குழுவினர் சீமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் சீமானை இக்குழுவினர் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் தமக்கு குரல்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
