கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரியான அவர், உரிய அனுமதியின்றி ஊடகங்களுக்குக் கருத்துக்களைத் தெரிவித்ததன் மூலம் நாட்டில் சர்ச்சைக்குரிய சூழலை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களிடையே அமைதியின்மையையும் உருவாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, திணைக்கள விதிமுறைகளை மீறிச் செயற்பட்டமைக்காகவே அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )