இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி நிறைவு
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சி இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையின் அனுசரணையில் கடந்த 17 முதல் 20ஆம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 17 முதல் 18 வரை துறைமுக கட்டம் மற்றும் டிசம்பர் 19 முதல் 20 வரை கடல் கட்டம் என இரண்டு கட்டங்களாக பயிற்சி நடைபெற்றது.
SLINEX என்ற பெயரில் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு கடற்படை பயிற்சிகளை வலுப்படுத்தும் இந்த திட்டம் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இரு நாடுகளும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு இந்தப் பயிற்சியின் ஊடாக கணிசமாக மேம்பட்டுள்ளது.