
டித்வா சூறாவளி!! மூன்றில் இரண்டு ரயில்வே அமைப்பு சேதம்
இலங்கையின் ரயில்வே அமைப்பில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இயங்கக்கூடியதாக உள்ளது என்று போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“ரயில்வே துறைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த அமைப்பில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே நாங்கள் பயன்படுத்த முடியும்,” என்று சேதங்களை விவரித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்து ரயில் பாதைகளில் 91 இடங்கள் சேதமடைந்தன.
73 பெரிய பாலங்கள் சேதமடைந்தன, மேலும் 38 சிறிய மதகுகள் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
149 இடங்களில் மரங்கள் அல்லது கிளைகள் தண்டவாளங்களில் விழுந்துள்ளன.
மேலும் 177 இடங்கள் சேதமடைந்தன அல்லது ஏதோ ஒரு வகையில் தடைபட்டுள்ளன.
27 ரயில் நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
