உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை

உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை

உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

இந்த சூழலில், வருடாந்திர கூட்டத்தில் இராணுவ தளபதிகள் மத்தியில் புடின் நேற்று உரையாற்றிய போது,

அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க தவறினால், உக்ரைனில் தனது பிராந்தியக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்றுவோம்.

ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளது.

பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புகிறது. ராஜதந்திரம் வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா பாடுபடும் என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )