இ.தொ.காவில் கடும் உச்சத்தில் கருத்து மோதல்?

இ.தொ.காவில் கடும் உச்சத்தில் கருத்து மோதல்?

மலையக அரசியலில் பிரதான கட்சியான இ.தொ.கா கடந்த பல வருடங்களாக அதன் செல்வாக்கை இழந்துவருகிறது.

இந்த நிலையில் கட்சிக்குள் தற்போது கருத்து முரண்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இவ்வாறு கருத்து முரண்பாடுகள் அதிகரிப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு பாதகமாக அமையும் என்பதால் உள்ளக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை இ.தொ.கா வகுப்பது சிறந்ததாக இருக்கும் என அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கட்சியின் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அறிய முடிகிறது.

என்றாலும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் இடையே சில முரண்பாடுகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )