
பிரித்தானியாவில் வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் – தொழிநுட்ப கோளாறே காரணம்
பிரித்தானியாவில் ஓட்டுநர்கள் சிலருக்கு வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்துள்ளன.
சில வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கெமராக்களின் தொழிநுட்ப கோளாறே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட A வீதிகள் மற்றும் மோட்டார் பாதைகளில் உள்ள, நிலைக்கு ஏற்ப வேகம் மாறும் முறைமையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், வேக வரம்பு மாற்றப்பட்டதும் சில ஓட்டுநர்கள் தவறாக வேகமாக ஓட்டியதாகக் கணக்கிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீரமைப்பு பணிகள் தற்பாது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் அறிவித்துள்ளன.
