
தென் கொரிய குடியரசு மற்றும் பிரித்தானியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து
பிரித்தானியா மற்றும் தென் கொரிய குடியரசு ஒரே இரவில் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், சுமார் £2 பில்லியன் மதிப்புள்ள பிரித்தானிய ஏற்றுமதிகள் சியோலில் இருந்து செல்வதால் பாதிப்பு ஏற்படாது என்றும்,
தென் கொரியாவிற்கு மேலதிகமாக £400 மில்லியன் சேவை ஏற்றுமதி செய்யப்படும் என்றும் பிரித்தானியா நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை “பிரித்தானிய வணிகங்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு மாபெரும் வெற்றியென” வர்த்தக குழுவினர் கூறுகின்றனர்.
பிரெக்ஸிட் காலத்துக்குப் பின்னர், பிரித்தானியா கூட்டணியில் இருந்தபோது கொண்டிருந்த உறவுகளை மாற்றுவதற்கான மற்றொரு முக்கிய ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது.
CATEGORIES உலகம்
