
பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவையை மேம்படுத்த புதிய சீர்திருத்தங்கள் அறிவிப்பு
பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவையில் பல் மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் அரசு புதிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்களின் படி, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பல் மருத்துவர்களுக்கு மேலதிக சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அஞ்சல் குறியீடு லொட்டரி (postcode lottery) என அழைக்கப்படும் பல் மருத்துவ அணுகல் சிரமத்தை முடிவுக்கு கொண்டு வர, வருடத்திற்கு £150 மதிப்புள்ள பல் மருத்துவ வவுச்சர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என் கொள்கை மாற்றம் எனும் சிந்தனையாளர் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் தேசிய சுகாதார சேவையில்பல் மருத்துவத்தை பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களின் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று அந்த குழு தெரிவித்துள்ளது.
CATEGORIES உலகம்
