
IPL ஏலம் : இரண்டு கோடிக்கு விலைப்போன ஹசரங்க
அபுதாபியில் தற்போது (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அடிப்படை விலையான 20 மில்லியன் இந்திய ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
இன்று முன்னதாக நடைபெற்ற ஏலத்தில், அவுஸ்திரேலியாவின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான கெமரூன் கிரீன், ஐ.பி.எல். ஏல வரலாற்றில் ஒரு சாதனையாக 252 மில்லியன் இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்டார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அவுஸ்திரேலிய வீரருக்காக தீவிர போட்டி நிலவிய போதிலும், ஷாருக் கான் உரிமையாளராக உள்ள KKR அணி, கிரீனைத் தன்வசப்படுத்தியது.
இதன் மூலம், அவர் தனது நாட்டு வீரரான மிட்செல் ஸ்டார்க்கின் (IPL 2024, KKR, 247.5 மில்லியன் இந்திய ரூபாய்) சாதனையை முறியடித்து, ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைபோன வெளிநாட்டு வீரர் ஆனார்.
