
படையப்பா மறுவெளியீடு : முதல் நாளில் பிரமாண்ட வசூல்
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி, நேற்று(12) படையப்பா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது.
1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன் எனப் பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் படையப்பா.
இத்திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் படம் மறுவெளியீடு செய்யப்பட்டது.
இந்தநிலையில் படையப்பா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி படையப்பா திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
CATEGORIES சினிமா
TAGS படையப்பா மறுவெளியீடு
