
அவசர நாடாளுமன்றக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு
எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பேரிடர் நிலைமைகள் தொடர்பில் இந்தக் கூட்டத் தொடரில் விசேட விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
