
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இன்றும் கூடுகிறது
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இன்று (10) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வழங்கப்படும் வெளிநாட்டு உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் குழுவை நியமித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தலைமையிலான இந்தக் குழுவில் 08 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை, உதவி விநியோகத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் தூதரகங்களுக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
