இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

டிசம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய இந்தியாவிலிருந்து 10,453 சுற்றுலாப் பயணிகள் குறித்த காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் ரஷ்யாவிலிருந்து 5,420 பேரும் பிரித்தானியாவிலிருந்து 3,823 பேரும் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் பிரான்ஸிருந்து 2,627 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 2,153,815 ஐ கடந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 485,249 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவிலிருந்து 195,565 பேரும் ரஷ்யாவிலிருந்து 164,013 பேரும் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ரஷ்யாவிலிருந்து 164,013 சுற்றுலாப் பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 136,081 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

மேலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சீனாவிலிருந்து 124,298 பேரும் பிரான்ஸிலிருந்து 103,307 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This