
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43,000 ஐ கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு காணப்படுகிறது.
இதன்படி, இந்த மாத்தின் முதல் வாரத்தில் வருகை தந்தவர்களில் 8,989 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யா, ஜேர்மன், ஐக்கிய இராச்சியம், சீனா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்தும்
சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
