
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் பரிந்துரைக்கமைய, 17 அதிகாரிகள் மற்றும் 2,069 சிரேஷ்ட, கனிஷ்ட மாலுமிகள் என மொத்தம் 2,086 கடற்படை வீரர்களுக்கு அடுத்த தரத்திற்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்தும் இன்று (09) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு குறித்த பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
