
பிரித்தானியாவில் இளைஞர் வேலையின்மையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை
பிரித்தானியாவில் இளைஞர்களின் வேலையின்மையை குறைக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தொழிற்பயிற்சித் திட்டம் விரிவாக்கப்படுவதால் 50 ஆயிரம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தொழிற்பயிற்சியில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை 40 வீதமாக குறைந்துள்ளதென திறன்கள் அமைச்சர் பரோனஸ் ஜாக்கி ஸ்மித் (Baroness Jacqui Smith) தெரிவித்துள்ளார்.
இதனை மாற்றும் வகையில், 25 வயதுக்குட்பட்டவர்களுக்கான தொழிற்பயிற்சிகளுக்கான 5 வீத வரி நீக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு, விருந்தோம்பல், பொறியியல் மற்றும் பாதுகாப்பு துறைகளில் புதிய தொழிற்பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
2021 ஆம் ஆண்டு முதல் 16 தொடக்கம் 24 வயது இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது சுமார் 10 இலட்சம் இளைஞர்கள் வேலை, கல்வி அல்லது பயிற்சி இன்றிய நிலையில் உள்ளனர் என கூறப்படுகிறது.
