டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வலுவிழப்பு தொடர்பில் இந்திய ரிசர்வ் வங்கி கவனம்

டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வலுவிழப்பு தொடர்பில் இந்திய ரிசர்வ் வங்கி கவனம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி குறைந்து வருகின்றமை தொடர்பில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்றும் அதனைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பிலும் நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் அருண் நேரு கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு கேள்விக்கு பதிலளித்த பங்கஜ் சவுத்ரி, அரசு இந்த விடயத்தில் தலையிட முடியாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்திய இளைஞர் சக்தியை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த அரசின் திட்டங்கள் குறித்து மலப்புரம் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளைாட்டுத்துறை அமைச்சர், “ இந்தியாவின் மக்கள் தொகையில் 65 வீதமானோர் 30 வயதுக்கு குறைவானவர்களாக இருக்கிறார்கள் என்றும் மக்கள் தொகை நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சாராத ஒரு லட்சம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என இந்திய பிரதமர்  நரேந்திர மோடி கூறி இருக்கிறார் என்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளைாட்டுத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )