
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பிய ஏழாவது மனிதாபிமான உதவி விமானம் நாட்டை வந்தடைந்தது
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பிய ஏழாவது மனிதாபிமான உதவி விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.
நாட்டை மீட்பதற்கு இலங்கையின் நட்பு மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளில் உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிடப் பொருட்கள் அடங்குகின்றன.
இதற்கமைய இன்று வரை வழங்கப்பட்ட நிவாரண உதவிகளின் மொத்த அளவு 89 தொன்களாக அதிகரித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒருங்கிணைந்த நிவாரணக் குழுவால் இதுவரை 18 சடலங்கள் மீட்டுகப்பட்டுள்ளதாகவும்
பாதிக்கப்பட்ட 8 பேருக்கு கள மருத்துவ சிகிச்சையை வழங்கியுள்ளதாகவும் உறுதிப்படுது்தப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
