
பாடசாலைகள் மீள திறக்கப்படும் திகதி தொடர்பில் விசேட அறிவிப்பு
பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் சரியான திகதி, கல்வி அமைச்சில் நடைபெறும் நாளைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களால் நாட்டிலுள்ள 500 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாணவர்களின் புத்தகங்கள், பைகள், காலணிகள் சேதமடைந்துள்ளன. பதுளை, அநுராதபுரம், கண்டி உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த பாடசாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன நலனுக்காகப் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்படும் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, யுனிசெஃப் தகவலின்படி, நாட்டில் 275,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
