மியான்மார் அரசாங்கத்தின் உதவி பொருட்கள் அடங்கிய சிறப்பு விமானம் நாட்டை வந்தடைந்தது

மியான்மார் அரசாங்கத்தின் உதவி பொருட்கள் அடங்கிய சிறப்பு விமானம் நாட்டை வந்தடைந்தது

மியான்மார் அரசாங்கத்தால் நாட்டிற்கு வழங்கப்பட்ட பேரிடர் உதவித் தொகுதி நாட்டை வந்தடைந்தது.

அந்நாட்டு விமானப்படையின் சிறப்பு விமானமொன்று நேற்று (06) நள்ளிரவு குழுவொன்றுடன் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

சுகாதாரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அந்த விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கைக்கான மியான்மர் தூதுவர் மார்லா தான் ஹ்தைக், வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் சாவ் பியோ வின் மற்றும் இலங்கை விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் தேசபிரிய சில்வா ஆகியோர் பொருட்களை பெற்றுக்கொள்ளும் இடத்தில்
தங்களது பங்களிப்பை அளித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )