
வெலிமடை – நுவரெலியா வீதி மீள திறக்கப்பட்டது
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருந்த வெலிமடை – நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக இன்றைய தினம் மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி இந்த வீதி மூடப்பட்டது. வெலிமடை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள கெப்பட்டிப்பொல பகுதியில் ஏற்ப்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக வீதி மூடப்பட்டது.
அனர்த்தங்களினால் வீதி சேதமடைந்திருந்த நிலையில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த பணிகள் நிறைவடைந்துள்ளதால் வீதி மீள திறக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
