கற்பிட்டி கடற்பரப்பில் பாரியளவான போதைப்பொருள் கண்டெடுப்பு

கற்பிட்டி கடற்பரப்பில் பாரியளவான போதைப்பொருள் கண்டெடுப்பு

கற்பிட்டி கடற்பரப்பில் 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன..

கடற்படையினர் நேற்று இரவு (05) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கண்டுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மறைத்து வைக்கப்பட்டிருந்த படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )