
2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 7.30 அளவில் நடைபெற்றது, இதில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டன.
அத்துடன் எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டது. இருவர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி. பொன்னம்பலம் மட்டுமே எதிராக வாக்களித்தார்.
இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சி கட்சியின் எஸ். ஸ்ரீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.
CATEGORIES இலங்கை
