
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கான தரவு சமர்ப்பிப்பு
சீரற்ற வானிலையால் அனர்த்தத்திற்குள்ளான தொழில்துறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அத்துறைகள் தொடர்பான தரவுகளை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தகவல்களைப் பின்வரும் இணையதளங்கள் மூலம் உள்ளிட முடியும்.
www.industry.gov.lk ஊடாக அல்லது https://aid.floodsupport.org/business-impact ஊடாகஉள்ளிட முடியும்.
அதேபோன்று, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகள் குறித்து அறிவிப்பதற்காக “0712666660” என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சேதமடைந்த தொழில்துறையாளர்கள் அனைவரும், குறித்த தரவு அமைப்பிற்குத் தேவையான தகவல்களை முடிந்தவரை விரைவில் வழங்குமாறு அமைச்சு கோரிக்கை விடுக்கிறது.
CATEGORIES இலங்கை
