
சுனாமியை விட டித்வா சுறாவளி மூன்று மடங்கு அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது
டித்வா சூறாவளியின் பொருளாதார இழப்பு தோராயமாக 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2004ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட சேதத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே என்றும், பொருளாதார மீட்புத் திட்டத்தை உருவாக்க பேரிடருக்குப் பிந்தைய முறையான மதிப்பீடு பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2004 சுனாமியின் பொருளாதார சேதம் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் 2026 வரவு செலவுத் திட்டத்தை மாற்றி, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஈடுபாட்டை நாடுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதலளித்து பேசிய அவர் பொருளாதார இழப்பை முறையாக மதிப்பிட்ட பின்னரே அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
