
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணி
இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரின் முதல் இரண்டு T20 போட்டிகளும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
அத்துடன் மீதமுள்ள 3 போட்டிகளும் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இரு அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES விளையாட்டு
