டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி

டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் இன்றைய பெறுமதி முதன்முறையாக 90 ரூபாவை கடந்துள்ளது.

வர்த்தகப் பற்றாக் குறை, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்வதில் தாமதம் ஆகியவை இந்திய ரூபாவின் வீழ்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது.

இதேவேளை உலகின் ஏனைய நாடுகளை விட இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பெற்றுக்கொள்கின்றனர். இதனால் அந்நிய செலாவணி குறைந்து ரூபாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது

CATEGORIES
Share This