
பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட் பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட பேரிடரட்களால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 565 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 20,271 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 233,015 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், தற்போது 1,441 பேர் நாடு முழுவதிலும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
