வரவு செலவுத்திட்டம் குறித்து அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ரீவ்ஸ் பதில்

வரவு செலவுத்திட்டம் குறித்து அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ரீவ்ஸ் பதில்

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் பதிலளித்துள்ளார்.

இந்த வரவு செலவு திட்டம் ஆரம்பம் முதல் முடிவு வரை பேரழிவு என  தொழிற்கட்சி அமைச்சர் ஒருவர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அமைச்சர்களிடம் உண்மையான தகவல் மறைக்கப்பட்டதா என பிபிசி கேள்வி எழுப்பியுள்ளது.

அதற்கு பதிலளித்த ரேச்சல் ரீவ்ஸ்  எதனையும் மறைக்கவில்லையென்றும் வரவு செலவுத்திட்டத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே அமைச்சர்களுக்கு கூறுவது வழக்கம் இல்லை என கூறியுள்ளார்.

வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கும் தினத்தன்று காலை அமைச்சரவை உறுப்பினர்கள் முழு விபரங்களையும் பெறுவார்கள் என நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் பதிலளித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )