
சீரற்ற வானிலையால் 108 வீதி போக்குவரத்துகளுக்கு தடை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது 108 வீதிகள் மூடப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் வெள்ளம், மண்சரிவுகள் மற்றும் பிற பேரிடர் தொடர்பான ஆபத்துகளை குறைப்பதற்காக வீதிகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் 08 வீதிகளும் மத்திய மாகாணத்தில் 15 வீதிகளும் ஊவா மாகாணத்தில் 11 வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும் வடமத்திய மாகாணத்தில் 05 வீதிகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 10, மூடப்பட்டுள்ளதுடன் வடமேல் மாகாணத்தில் 10 வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, வட மாகாணத்தில் 12 வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்தில் 38 வீதிளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
