
அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு
நாட்டில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 366 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக 309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
