கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ் – 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு

கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ் – 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு

அநுராதபுரம்-புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸொன்றில் இருந்த 67 பயணிகளும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

முதலில் சுமார் 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வெள்ளம் காரணமாக பஸ்ஸின் மேற்பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் உட்பட பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர்.

தற்போது அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் சிலர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This