
கொலை செய்யப்பட்டாரா இம்ரான்கான் ?
சிறையில் இம்ரான்கான் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் சிறைத் துறை நிர்வாகம் மறுத்துள்ளது.
அடியாலா சிறையில் இம்ரான்கான் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறைத்துறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் ஊழல் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திடீரென இம்ரான் கானை பாகிஸ்தான் இராணுவம் சிறையில் அவரை கொலை செய்துவிட்டதாக வெளியான தகவல் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கட்சியின் தொண்டர்கள் சிறை வளாகத்துக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Where is Imran Khan என்ற ஹேஷ்டாக் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்தும் வைரலாகியுள்ளது.
இதேவேளை, இம்ரான் கானை காண்பதற்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்த அவரது சகோதரி, இம்ரான் கானின் தலைமுடியை கூட யாராலும் தொட முடியாது என்றும் அப்படி தொட்டால்.. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதை பாருங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
