
மாத்தளை மாவட்டத்தில் 540 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவு
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தின் கம்மடுவயில் பதிவாகியுள்ளது.
இதன்படி, மாத்தளை மாவட்டத்தில் 540 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை,நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பகுதியில் 421 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் வட்டவளை பகுதியில் 316 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மாவட்டத்தின் மாரஸ்ஸன பகுதியில் 403 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சியும்
மொறஹேன பகுதியில் 394 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது
இதேவேளை பதுளை ஹாலிஎல பகுதியில் 232 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
CATEGORIES இலங்கை
