
இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இல்லை: அடுத்தவாரம் நள்ளிரவு வரை கூடும்
நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, அடுத்த வாரம் திங்கட்கிழமை (1) மற்றும் செவ்வாய்க்கிழமை (2) ஆகிய தினங்களில் நள்ளிரவு 12 மணி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (27) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
