
கொட்டும் மழையிலும் மாவீரர் நினைவாலயங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்
மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு உட்பட புலம்பெயர் தேசங்களில் இடம்பெற உள்ளது.
இந்த நிலையில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயங்களை நோக்கி கொட்டும் மழையிலும் மக்கள் தன்னெழுச்சியாக செல்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏற்பாட்டு குழுக்களால் மாவீரர்கள் நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

